15.1 C
London
Friday, September 24, 2021

நடிகர் சசிகுமார் படத்தில் இணைந்த பிரபல பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை சம்யுக்தா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். மேலும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார்.

இந்த படம் அதிக பொருட்செலவில் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் பங்கு கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் புரொடக்சன் தயாரிக்கவுள்ளது. இது இவர்களின் தயாரிப்பில் உருவாகும் 5 ஆவது படமாகும். மேலும், இந்த படத்திற்கான பாடல் பதிவோடு படக்குழுவினர் பூஜையை இன்று தொடங்கியுள்ளனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More