பிக்பாஷ் தொடர்: மேக்ஸ்வெல்லின் பழைய அதிரடி ஆட்டத்தில் மெல்போர்ன் அணி வெற்றி.!

  • பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில்நடைபெற்று வருகிறது.
  • மெல்போர்ன் ஸ்டார்ஸ்  அணிக்காக மத்தியில் இறங்கிய மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 83 ரன்கள் குவித்தார்.

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று குயின்ஸ்லாந்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் , மெல்போர்ன் ஸ்டார்ஸ்  அணிகள் மோதின. இதில்  டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பந்து வீசமுடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இறங்கியது. மன அழுத்த பிரச்சினை காரணமாக 5 வார ஓய்வுக்கு பிறகு களம் இறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் பழைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களால் பார்க்க முடிந்தது.

மத்தியில் இறங்கிய மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 83 ரன்கள் குவித்தார். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில்  8 விக்கெட் இழந்து 145 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை  ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan