USelections 2020:முன்னிலையில் பைடன்.. ஆடல், பாடலுடன் கொண்டாடும் ஆதரவாளர்கள்!

அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், பைடனின் ஆதரவாளர்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

மேலும், பென்சில்வேனியா உட்பட 3 மாகாணங்களில் வாக்குகளை எண்ணுவதிலும், பைடனுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்குகளை ஜார்ஜியா, மிக்சிகன் மாகாண நீதிமன்றங்கள் நிராகரித்துள்ள நிலையில், ஜார்ஜியா அரசு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு தெரிவித்துள்ளது.

அதன்படி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 16 வாக்குகளைக் கொண்ட ஜார்ஜியாவிலும், பென்சில்வேனியா மாகாணத்தில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகித்து வருகிறார். இதன்காரணமாக பைடனின் ஆதவாளர்கள், நியூயார்க் நகர வீதிகளில் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.