புவனேஷ்வர் குமார் காயத்தால் 3 போட்டிகளில் இருந்து விலகல் ! கேப்டன் கோலி அறிவிப்பு !

உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த லீக் தொடரில் 22 -வது போட்டியான நேற்றைய போட்டியில் இந்தியா ,பாகிஸ்தான் அணிகள் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
 முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 140 ,கோலி 77 , கே .எல் ராகுல் 57 ரன்கள் குவித்தனர்.போட்டி மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இந்நிலையில் போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 5 -வது ஓவரில் நான்காவது பந்து வீசும் போது வழுக்கி விழுந்தார்.

அதனால் போட்டி இருந்து வெளியேறினார்.அவருக்கு பதில் தமிழக வீரர் விஜய் சங்கர் மீதம் உள்ள இரண்டு பந்தை வீசினார்.இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு பேசிய கேப்டன் கோலி புவனேஷ்வர் குமார் குணமாக சிலநாள்கள் ஆகும். மேலும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார் என கூறினார்.
புவனேஷ்வர் குமாருக்கு பதில் இந்திய அணியில் முகமது ஷமி விளையாட உள்ளார்.இதற்கு முன் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்து இன்னும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan