அழைப்பு உங்களுக்குத்தான்… பொறியியல் பட்டதாரிகளுக்கு BHEL நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிவேலை.!

பொறியியல் பட்டதாரிகளுக்கு BHEL நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிவேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் எனப்படும் BHEL நிறுவனத்தில் பட்டதாரி அளவிலான அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை BHEL நிறுவனம் அறிவித்துளளது. இந்த BHEL நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியை முடித்துவிட்டால் அதற்கென கிடைக்கும் சான்றிதழை கொண்டு பெரிய நிறுவனங்களிலோ அல்லது BHEL நிறுவனத்தில் நிரந்தர பணிக்காகவோ விண்ணப்பிக்க உதவும்.

இந்த அப்ரண்டீஸ் பணிக்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி வாய்ந்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதன் பின்னர் நடக்கும் நேர்காணல் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பாக இதில் எழுத்து தேர்வு என்பது கிடையாது.

காலிப்பணியிடங்கள் – 18.

கல்வித்தகுதி – BE, B.Tech (இளங்கலை பொறியியல் பட்டம்)

வயது வரம்பு – 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணியிடங்கள் – தூத்துக்குடி , திருநெல்வேலி, சென்னை, ஹைதிராபாத், தெலுங்கானா.

விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முகவரி – SDGM (HR), PSSR, BHEL Integrated Office Complex, TNEB Road, Pallikaranai, Chennai – 600100.

அறிவிப்பு வெளியான தேதி – 23 மே 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 13 ஜூன் 2023.

அதிகாரப்பூர்வ வலைத்தளமான bhel.com க்கு செல்லவும். BHEL Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

மேற்கூறிய இணைப்பிலிருந்து (லிங்கில் இருந்து) BHEL Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்ப வேண்டும்.

தேவையான அனைத்து ஆவணங்களையும் (அடையாள சான்று, கல்வி சான்று, புகைப்படம்,) ஆகியவற்றை இணைக்க வேண்டும். அதன் பின்னர் அதிகாரபூர்வ இணையதள வழிகாட்டுதலின் படி மேற்குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் தேர்வு இருப்பின் அவ்வழியாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் தகுதிவாய்ந்த நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவர்களில் தகுதியான நபர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி வேலை அளிக்கப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.