நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆதலால், சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதால் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பவானிசாகர் அணையில் நேற்று வரை 342 கனஅடியில் இருந்த தண்ணீர் இன்று காலை 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 5.2 டிஎம்சி அளவும் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைத்து மின்னாலைக்கும் மின்சார உற்பத்திக்காக நீர்திறப்பு அதிகரிக்கும்போது, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here