பாரதிய ஜனதா ஒரு பகட்டு கட்சி…! மேற்கு வங்க முதல்வர் அதிரடி…!

இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்று மம்தா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதில் பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பாஜகவை விமர்சித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், இத்தாலியில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் தன்னை கலந்து கொள்ள விடாமல் மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டினார். பொய்கள், வெறுப்பு மட்டுமே பாஜகவிடம் உள்ளது. அந்த கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது, மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்றும், பாரதிய ஜனதா ஒரு பகட்டு கட்சி என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.