29.4 C
Chennai
Tuesday, June 22, 2021

குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை ஜூனில் தொடங்கும்- பாரத் பயோடெக்


10
/ 100


பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் வரும் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகம் பாதிப்பதாக கூறப்படுவதால், அவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதுபற்றி ஹைதராபாத்தில் உள்ள FICCI அமைப்பு  உறுப்பினர்களுடன் காணொளி நடைபெற்ற  உரையாடலில் பாரத் பயோடெக்கின் வணிக மேம்பாடு தலைவர் ரேச்ஸ் எலா கூறினார்.

இதனையடுத்து ,ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவாக்ஸின் வழங்கி பரிசோதிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாங்கள் கடந்த ஆண்டு தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். இப்போது எங்கள் கவனம் எங்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் உற்பத்தி திறனை 700 மில்லியன் அளவுகளாக உயர்த்துவோம் என்று கூறினார்.

மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டின் இறுதிக்குள் கோவாக்சினுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலைப் பெற பாரத் பயோடெக் எதிர்பார்க்கிறது என்றார்.

Latest news

Related news