உறவின்றி அமையாது உலகு… சுல்தான் படத்தின் கதையை கூறிய பாக்யராஜ் கண்ணன்..!

சுல்தான் படம் மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம் என்று இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் கூறியுள்ளார். 

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு JaiSulthanஇசை யமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான டீசர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது அதனை தொடர்ந்து படத்திற்கான முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கான டிரைலரை விரைவில் வெளியீட படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். இதில் அவர் கூறியது  “மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதை தான் இந்தப்படம்” என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.