வெற்றிலை என்பது வெறும் இலை அல்ல! வாங்க பாப்போம் இந்த இலையில் அப்படி என்ன இருக்குதுன்னு!

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள். பொதுவாக வயதானவர்கள் தான் இந்த வெற்றிலையை

By leena | Published: Jul 15, 2020 06:30 AM

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள். பொதுவாக வயதானவர்கள் தான் இந்த வெற்றிலையை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பார். அதையும் தாண்டி சில விஷேச வீடுகளில் இதனை வைத்திருப்பார்கள். வெற்றிலையை நாம் வெறும் இலையாக மட்டும் கருத்தாக கூடாது. அதில் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய, உடல் ஆற்றலை வலுவாக்க கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த வெற்றிலை போடும் பழக்கம் சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக வரலாற்று கூறப்படுகிறது. சங்க தமிழ் நூலகளான, எட்டு தொகை, கம்பராமாயணம், புறநானுறு மற்றும் கலிங்கத்து பரணி போன்ற நூல்களில் வெற்றிலையின் பண்பாட்டு குறித்து கூறப்பட்டுள்ளது. வெற்றிலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய், நுண்ணுயிர்களை கொல்லக் கூடியது. சிறு காயங்கள் முதல்  தீ காயங்கள் வரை அனைத்து காயங்களையும் வெற்றிலை சாறு ஆற்றும் தன்மை கொண்டது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். மலசிக்கல் பிரச்சனையை நீக்கி, நல்ல பசி உணர்வை உண்டாக்கும். வெற்றிலை நமது ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. அதனால், நமது முன்னோர்கள் உணவு அருந்திய பின் வெற்றிலையை மென்று சாப்பிடுவார்கள். நோய்நொடி இன்றி, நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்ததற்கு வெற்றிலையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
Step2: Place in ads Display sections

unicc