சிறந்த டி20 கேப்டன் ரோஹித் சர்மா..!

சிறந்த டி 20 கேப்டன் ரோஹித் சர்மா என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.

By bala | Published: Jul 10, 2020 02:07 PM

சிறந்த டி 20 கேப்டன் ரோஹித் சர்மா என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார்.

இந்த நிலையில் இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான டாம் மூடி, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் டி20 போட்டியில் சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா, அவர் சமீப காலங்களாக சிறப்பாக செயல்படுகிறார் இந்த வருடம் ஐபிஎல் நடைபெற்றிருந்தால் கண்டிப்பாக ரோஹித் சர்மாவிடம் சிறந்த பேட்டிங்கை பார்த்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc