சிறந்த தாயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு..!!அசத்திய கனா..!!

சிறந்த தாயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு..!!அசத்திய கனா..!!

நார்வேயில் ஆண்டு தோறும் தமிழ்த்திரைப்பட திருவிழாவானது நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பட்டியலானது  வெளியாகியுள்ளது.

அதில் சிறந்த நடிகராக பெரிதும் ரசிகர்களை கவர்ந்த  96 படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே படத்தில் ஜானுவாக நீங்கா இடம்பிடித்த த்ரிஷா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சிறந்த திரைப்படமாக பெரிதும் பேசப்பட்ட பரியேறும் பெருமாள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த இயக்குனராக விஜய்சேதுபதியின் தயாரிப்பில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை எடுத்த லெனின் பாரதி தேர்வுப்பட்டுள்ளார். வெற்றி விழா கொண்டாடி வருகின்ற கனா படத்தை தயாரித்தவரும் நடிகருமான சிவகார்த்திகேயன் சிறந்த தயாரிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சிறந்த இசையமைப்பாளராக பரியேறும் பெருமாள்,வடசென்னை  படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விருதுகள் ஏப்ரல் மாதம், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *