கர்நாடகாவில் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டிய இடுகாடுகள்;வீதியில் கிடக்கும் பாதி எரிந்த உடல் பாகங்கள் !

பெங்களூரில் குடியிருப்பவர்களின் வீட்டு வாசலில் பாதி எறிந்த உடல்கள் கிடக்கும் அவலம்…..

கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,368 ஆகவும் இந்தியா முழுவதும் இறந்துவர்களின் எண்ணிக்கை 3,417 பேர் அதில் கர்நாடகாவில் மட்டும் இறப்பு 217 ஆகவும் உள்ளது, இந்நிலையில் பெங்களூரில் உள்ள காம்ராஜ்பேட் இடுகாட்டில் சினிமா தியேட்டரில் மாட்டப்படும் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டப்பட்டு அங்குள்ள படுமோசமான நிலைமையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

மேலும் அங்கு கொரோனா மரணங்களை எதிர்கொள்ள அவசர அவசரமாக பல இடுகாடுகள் உருவாக்கப்பட்ட நிலையில் அங்கும் உடல்களை எரிக்க போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் பாதி எரிந்தும் எரியாததுமாக உடல் பாகங்களை நாய்கள் இழுத்துச் சென்று அங்குள்ள தெருக்களிலும், வீடுகளின் வாசலிலும் போட்டு விட்டு சென்றுவிடுவதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூர் காம்ராஜ்நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 2 மணிநேரத்தில் 24 நோயாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிடனஹல்லியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரே சமயத்தில் 24 உடல்களை மொத்தமாக வைத்து எறிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அங்கு போதுமான அளவு சுடுகாடுகளை ஏற்படுத்தினாலும் சுடுகாடுகளின் வாசலில் உடல்களுடன் வரிசைகட்டி நின்று 10 மணி நேரம் காத்திருந்து உறவினர்கள் உடலை எரிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிலர் இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு பல சுடுகாடுகளுக்கும் அழைந்து வருகின்றனர்.

மேலும் தாவனகெரே இடுகாட்டில் உடல்களை எறிக்க போதுமான அளவு வெறட்டி மற்றும் விறகுகள் இல்லாத காரணத்தினால் உடல்களை முழுவதும் எறிக்க முடியவில்லை மேலும் இடுகாட்டில் பணிபுரியும் நபர்கள் இல்லாத நேரங்களில் பாதி எறிந்த உடலை அங்குள்ள நாய்கள் இழுத்துச்சென்று தெருவில் போட்டுவிட்டு செல்லும் மிகக் கொடுமையான காட்சி மிக சாதாரணமாக அங்கு நிலவி வருகிறது.