படைப்பாளிகளுக்கும், படிப்பாளிகளுக்கும் கூகுள் வழிகாட்டுகிறது! என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

உலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

புதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. இதன் முழு விவரத்தையும் இனி தெரிந்து கொள்ளலாம்.

வரலாறு
நாவல் படிக்கும் பலருக்கும் உதவி செய்யவே புதுவித இணையதளம் உள்ளது. இதன் பெயர் “நாவல்ஸ் ஆன் லொகேஷன்” (novelsonlocation) என்பதாகும். இது கூகுள் மேப்ஸின் உதவியோடு செயல்படுகிறது. இதில் பலதரப்பட்ட இடங்களை பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அந்த இடத்தில் உள்ள புகழ்பெற்ற நாவல்களை பற்றிய தகவல் இதில் இடம்பெற்றிருக்கும்.

பின் பாயிண்ட்
உதாரணத்திற்கு சென்னை போன்ற இடங்களில் புகழ்பெற்ற நாவல் ஒன்று உள்ளது என்றால், அந்த நாவல் எந்த இடத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளதோ அதை பற்றிய முழு விவரமும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த தளத்தில் பல்வேறு பின் பாயிட்ண்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இதை கிளிக் செய்தால் அந்த இடத்தில் உள்ள புகழ்பெற்ற நாவல்களை இது உங்களுக்கு தெரிவிக்கும்.

Leave a Comment