மாதுளை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

மாதுளம் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தலையில் முடியில்லாதவர்களுக்கு

By bala | Published: Jun 11, 2020 08:30 AM

மாதுளம் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தலையில் முடியில்லாதவர்களுக்கு விரைவில் முடி வளர உதவுகிறது. 

பழங்களில் மிகவும் சுவையான பழம் என்றால் மாதுளை பழம் என்று கூறலாம் சிரியவர்களிலிருந்து  பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது .மேலும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

மாதுளை பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பைட்டோ கெமிக்கல்கள் இது அனைத்தும் அதிக அளவில் இருக்கிறது பலருக்கும் பழம் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் இது உரிப்பது மட்டுமே கடினம் மேலும் அந்தப் படத்தை சாப்பிட்டீர்கள் என்றால் உடலில் அதிக சத்துக்கள் கிடைக்கிறது. 

மாதுளம்பழச்சாறு குடித்தால் தலையில் முடிகள் இல்லாதவர்களுக்கு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தி நன்றாக வளர வைக்கும், தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

மேலும் நமது உடலில் நைட்ரிக் ஆக்சைட் என்ற தனிமம் குறையும்போது, நமக்கு மனஅழுத்தம் ஏற்படும். இந்த நிலையில் மேலும் மாதுளை பழம் சாப்பிடுவதால் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

மாதுளை பழத்தின் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கி நம் உடலை பள பளவென்று ஆக்கிவிடும், மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

Step2: Place in ads Display sections

unicc