துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

பொதுவாக பால் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இந்த பாலில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.

தற்போது இந்த பதிவில்  துளசி பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம்.

துளசி பால் செய்யும் முறை

முதலில் 4-5 துளசி இலைகளை எடுத்து நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இறுதியில் அந்த பாலை வடிகட்டி, வேண்டுமானால் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இதய ஆரோக்கியம் 

துளசி பாலில் உள்ள முழு சத்துக்களையும் பெற வேண்டும் என்றால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் அதன் முழு நன்மைகளையும் எளிதில் பெற முடியும். துளசியில் உள்ள யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்  கொள்ள,நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், இந்த துளசி பாலை குடித்து  வந்தால், இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சுவாச மண்டலம்

இந்த பாலை அடிக்கடி குடித்து வந்தால், சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், இது தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube