Wednesday, November 29, 2023
Homeலைஃப்ஸ்டைல்உங்க வீட்ல நாப்தலின் உருண்டைகள் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

உங்க வீட்ல நாப்தலின் உருண்டைகள் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

ஆரம்ப காலத்தில் இந்த நாப்தலின் உருண்டை இல்லாத வீடுகளை இருக்காது. இதற்கு பல இடங்களில் பெயர்  மாறுபடும் பாச்சை உருண்டை, நாப்தலின்  உருண்டை , அந்து  உருண்டை, பூச்சி உருண்டை என பல பெயர்கள் உள்ளது. இதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும்  தெரிந்து கொள்வோம்.

இந்த நாப்தலின் உருண்டைகளை துணிகளுக்கு இடையில் வைப்பதால் நல்ல வாசனைகள் வரும் மேலும் கழிப்பறையில் கூட பயன்படுத்தலாம். இந்த உருண்டைகளை பயன்படுத்தும் வீடுகளில் கதவைத் திறந்தாலே அதன் வாசனை தான் முதலில் வரும். இது நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு இதனுடன் சிறிது வாசனை பொருட்களை பயன்படுத்தி  நமக்கு நாப்தலின் ஆக கிடைக்கிறது . மேலும் இதை புதிதாக மாற்றி தற்போது கழிப்பறைகளுக்கு வாசனைகள் ஏற்படுத்துவதற்கு இன்று பல புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

உங்க வீட்டு மளிகை பொருள் சீக்கிரம் கெட்டுப் போகுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

அதை மக்களும் விரும்பி பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள வாயு காற்றில் கலந்து சிறு சிறு பூச்சிகளை சத்தம் இல்லாமல் கொன்று விடுகிறது இதனால்  மனிதர்களிடத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று இதை அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். ஆரம்பத்தில் பாச்சை  விரட்டிகளாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பிறகு துணிகளுக்கு அடியில் வைக்கவும் தற்போது சமையலறை முதல் கழிப்பறை வரை நறுமணத்திற்காக வீடு முழுவதுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இது பூச்சிகளுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது இல்லை இது  ஒரு சிலருக்கு பல பிரச்சனைகளையும் உண்டு செய்கிறது. இந்த நாப்தலின்  கலந்த காற்றை 19 மைக்ரோகிராம்  சுவாசிக்கும் போது .002mg    நாப்தலினை  சாப்பிடுவதற்கு சமம் என பல ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. இதனால் ஒரு சிலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் சுவாச பாதையில் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்துமா, சைனஸ் போன்றவைகளையும் உண்டாக்குகிறது.

ரத்தத்தில் நேரடியாக கலந்து ரத்த அணுக்களை பாதிப்படையச் செய்கிறது. பெரியவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகளை உண்டாக்கும்போது குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். நிறைய பேர் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் துணிகள் வாசனையாக இருப்பதற்காக இந்த உருண்டைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ரத்த சோகை வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் குரோமோசோம்களை பிறழ்வுகளாக  உண்டாக்கி செல்களின் வடிவமைப்பை மாற்றி புற்று நோய்களை உண்டாக்கக்கூடிய கார்சினோஜனை   உண்டாக்குகிறது. குறிப்பாக  ரத்த புற்றுநோயை உண்டாக்குகிறது. ஒரு நாள் சுவாசிப்பதால் இதன் பாதிப்புகள் நமக்கு தெரியாது தொடர்ந்து இதை நாம் பயன்படுத்தி சுவாசித்துக் கொண்டே இருந்தால் இந்த பாதிப்புகள் வரலாம். எனவே போதிய வரை இவற்றை தவிர்ப்பதே சிறந்தது.