, , ,

கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை! லோக்கல் வெட்டுக்கிளி தான் – வேளாண்துறை அதிகாரிகள்

By

கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை. லோக்கல் வெட்டுக்கிளி தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன.  இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

நேரலகிரி ஊராட்சியில் வாழைமரங்கள், எருக்கஞ்செடிகளில் வெட்டுக்கிளிகள் ஏராளமாக இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில், கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் என்று உறுதி அளித்தார். அதே சமயம், கிராமத்தில் உள்ள வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும்  எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி இலைகளை தின்ற உள்ளூர் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். 

Dinasuvadu Media @2023