தடுப்பூசி போட்டால் பீர் இலவசம்…! அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி…!

தடுப்பூசி போட்டுக் கொண்டால்,இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 21 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 63%பேர் தான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். வரும் ஜூலை 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக வெள்ளை மாளிகை பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

 மேலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.