Beautytips : பெண்களே உங்கள் முகம் பளபளக்க..! இதோ சூப்பர் டிப்ஸ்..!

By

beauty tips

பெண்களுக்கு ஏற்படும் சரும பிரச்னைகள் என்பது பொதுவானது தான் என்றாலும், இந்த பிரச்சனைகளை போக்க பெரும்பாலானோர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை தான் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது நமது சருமத்தில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இதற்கு மாற்றாக நாம் இயற்கையான முறையில் நமது சரும பிரச்னைகளை போக்க முற்படுவது நல்லது. நாம் இயற்கையான மருத்துவமுறைகளை கையாளும் போது, அது நமக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் நமது முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

சரும பிரச்சனைகளை போக்கும் நெல்லிக்காய் 

பெரிய நெல்லிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதனால் சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் தோன்றுகிறது. பெரிய நெல்லிக்காய் சருமம் ஈரப்பதத்துடன் இருக்க உதவுவதோடு, சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. தற்போது இந்த பதிவில் முகத்தை பளபளப்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 தேவையானவை  

  • பெரிய நெல்லிக்காய் – 2
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • இஞ்சி – ஒரு துண்டு
  • மிளகு – 6
  • சீரகம் – கால் டீஸ்பூன்
  • புதினா – 10 இலைகள்
  • உப்பு – சிறிதளவு
  • எலுமிச்சை பழம் – பாதி

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மிக்ஸியில் விதை இல்லாமல் வெட்டி வைத்துள்ள பெரிய நெல்லிக்காய் இரண்டையும் போட்டு, அதனுள் கருவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம், புதினா, உப்பு, எலுமிச்சைசாறு  ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நன்கு அரைத்து எடுத்த அந்த கலவையை ஒரு வடிகட்டியில் வடித்து அதன் சாறை மட்டும் தனியாக ஒரு டம்ளரில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சாறை வாரத்திற்கு ஒரு முறை பருகி வந்தால் நமது முகம் பளபளப்பாகுவதோடு, முடி உதிர்வு பிரச்சனை, உடல் எடை சம்பந்தமான பிரச்சனை,வயிறு  சம்பந்தமான பிரச்சனைகள் நீங்குவதோடு உடல் ஆரோக்கியமும் பெறுகிறது.