29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

‘இன்னொன்னு தாங்க இது’…! காமெடி நாயகன் செந்தில் பிறந்த நாள் இன்று.!

தமிழ் சினிமாவில் நடிகர் செந்தில் நடித்த படங்களின் காமெடி காட்சிகள் என்றுமே மக்களின் மனதில் அழியாதவையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அளவிற்கு மக்கள் ‘குலுங்கி குலுங்கி’  சிரிக்கும் வகையில் பல காமெடிகளை செய்து மக்களை மகிழ்வித்துள்ளார்.

senthil
senthil [Image Source : Google ]

தற்போது பல காமெடியன்கள் நடிப்பதற்கு வந்தாலும் கூட செந்திலை போல யாராலும் காமெடி செய்யவே முடியாது என்றே கூறலாம். இவர் கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த “ஒன்னு இந்தாருக்கு இன்னொன்னு எங்க? இன்னொன்னு தாங்க இது” வாழைப்பழ காமெடி இப்பொது வரை பேசப்படும் ஒரு காமெடியாக இருக்கிறது.

senthil birthday
senthil birthday [Image Source : Google ]

இப்படி தொடர்ந்து மக்களை மகிழ்வித்த காமெடி நடிகர் செந்தில் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

senthil
senthil [Image Source : Google ]

மேலும் நடிகர் செந்தில் தற்போது ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.