மீண்டும் ஊரடங்கிற்கு செல்லும் ஜெர்மனி மிகவும் எச்சரிக்கையாக இருங்க – ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜெர்மனியில் கொரோனா தொற்று முன்பை விட தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.இப்படி அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளைத் தடுக்கும் முயற்சியில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 6 மாநில ஆளுநர்களுடன் ஒரு நீண்ட வீடியோ கான்ஃபெரன்ஸில் ஆலோசனைக்கு பின்பு கூறிய அவர் ,கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் நாம் மிகவும் எச்சரிக்கியாக இருக்கபி வேண்டிய தருணம் என்றார்.இல்லையெனில் நாம் ஒரு குறுகிய தளர்வுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

இந்த ஊரடங்கில் கடைகள் மற்றும் உணவகங்கள் ஜனவரி இறுதி வரை முற்றிலும்  மூடப்படுகிறது. பள்ளிகள் மூடப்படுவதால் வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும் , குறைந்தது இந்த  மாத இறுதி வரை தொடரும் என்று மெர்கல் கூறினார்.

ஜெர்மனியில் நேற்று மட்டும் 11,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.787 மில்லியனாக அதிகரித்துள்ளது.இறந்தவர்களின் என்னைகை 944 அதிகரித்து 35,318 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Castro Murugan