பி.இ வகுப்புகள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் தொடக்கம் – அண்ணா பல்கலைக்கழகம்

பி.இ வகுப்புகள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் தொடக்கம் – அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது.  இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு  தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பி.இ, பி.டேக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கும் என்றும், டிசம்பர் 2-ம் தேதி செய்முறை தேர்வு நடைபெறும் என்றும், டிசம்பர் 13-ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்வுகள் நிறைவடைந்த பின் அடுத்த ஆண்டுக்கான செமஸ்டர் வகுப்புகள் 2022, ஜனவரி -19-ம் தேதி தொடங்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொறியியல் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அண்ணா பலக்லைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube