கனடாவில் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்ட பேனர்…! என்ன காரணம்…?

கனடாவுக்கு  கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வைரசை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவசரகாலத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி  இந்தியாவில்,தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, வெளி நாட்டு மக்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்டை நாடுகளான, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஜமைக்கா உள்ளிட்ட  ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவுக்கு  கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு இந்து அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து, கிரேட்டர் டொரண்டா என்ற சாலையில் பெயர் பலகைகள் வைத்துள்ளனர். மேலும் அந்த பெயர் பலகையில், இந்தியா மற்றும் கனடாவின் அன்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.