2-வது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் போராட்டம்…! தவிக்கும் பொதுமக்கள்…!

தொடர்ந்து 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனை போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பட்ஜெட் தாக்கலின் போது, 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என அறிவித்திருந்தார்.  இதற்கு, வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்த நிலையில், மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று வாங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனை போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தத்தில், பல கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.