ஜன..,17 மாட்டு வண்டி – குதிரை வண்டி ரேஸ்க்கு தடை..!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் களைக்கட்டியுள்ள நிலையில் வீர விளையாட்டுகளும் களைக்கட்ட துவங்கியுள்ளது.இதில் ஜல்லிக்கட்டு மாட்டுவண்டி ,குதிரை வண்டி பந்தயம் எல்லாம் சிறப்பு பெற்றது.

ஆனால் நாகப்பட்டிணம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஜன.17ம் தேதி அன்று மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி கிடையாது என்று கோட்டாட்சியர் தேன்மொழி அறிவித்துள்ளார்.மேலும் அனுமதியின்றி பந்தயம் நடத்தி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.