நாம் குழந்தைகளுக்கு கடையில் தான் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதுண்டு. இதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இதனால், சுத்தமான முறையில் சாப்பாடு செய்வதுடன், குழந்தைகளுக்கு பிடித்த வகையில், திருப்தியாகவும் செய்து கொடுக்கலாம்.
தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே பால்கோவா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பால் – 1 கப்
- சீனி – அரை கப்
- ரவை – கால் கப்
- ஏலக்காய் – சிறிதளவு
- பால் பவுடர் – கால் கப்
Balkova செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடாக்க வேண்டும். பின் அதனுள் சீனி போட்டு, ரவையை கிளறி கொண்டே போட வேண்டும். நன்கு கிளறி விடும் போது கலவை கெட்டியாக வரும்.
அதன்பின் பால் பவுடர் சேர்த்து கிளறி கெட்டியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அந்த கலவை ஆறிய பின், ஒரு பாத்திரத்தில் போடு உருண்டையாக உருட்டி எடுத்து பரிமாறலாம்.
நாம் கடையில் அதிக பணம் கொடுத்து பால்கோவா வாங்குவதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே செய்து திருப்தியாக சாப்பிடலாம்.