இசையமைப்பாளர் இளையராஜா 1970 காலகட்டத்தில் இருந்து 90 வரை தமிழில் வெளியான பல படங்கள் அவருடைய இசையில் தான் வெளியானது. அந்த அளவிற்கு அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் மாற்று படங்கள் வெற்றிபெற்றுவிடும். ஒரு கட்டத்தில் இளையராஜா இசையமைத்தால் தான் இந்த படம் வெற்றிபெறும் என்கிற அளவிற்கு கூட இருந்தது. அதைப்போல சில படங்கள் சரியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட அந்த படத்தில் இருக்கும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிவிடும்.
அப்போது இருந்த பல பெரிய இயக்குனர்களும் சரி சிறிய இயக்குனர்களும் சரி இளையராஜாவின் ஸ்டூடியோவில் தான் இருப்பார்கள் என்றே கூறலாம். இப்படி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு எதிராக பல இசையமைப்பாளர்கள் இசையமைத்து கொண்டிருந்தாலும் கூட இளையராஜாவின் இசையில் வெளியாகும் படங்கள் தான் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால், 1992-ஆம் ஆண்டுக்கு பிறகு இளையராஜாவின் இசை குறைய தொடங்கியது அதற்கு முக்கிய காரணம் யார் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் தான். இளையராஜாவிடம் கீபோர்ட் வசிப்பவராக இருந்த ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இதுவரை இல்லாத வகையில் புதுவிதமான ஒளியை கொடுத்ததால் ரோஜா படத்துடன் சேர்த்து பாடல்களும் கொண்டாடப்பட்டது.
இதனால் இளையராஜாவிடம் இசைக்காக சென்ற பல இயக்குனர்களும் அப்படியே திரும்பி ஏ.ஆர்.ரஹ்மான் இடம் சென்றனர். ரோஜா படத்தில் ஹிட் கொடுக்க தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்ததாக தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வந்தார். இந்நிலையில், இளையராஜாவை ஓரங்கட்ட இயக்குனர் கே.பாலச்சந்தர் போட்ட மாஸ்டர் பிளான் தான் ரஹ்மான்தானாம்.
ஏனென்றால், அந்த சமயம் இளையராஜா தொடர்ச்சியாக படங்களுக்கு இசையமைத்து கொடுத்துக்கொண்டு தன்னைவிட்டு ஆள் இல்லை இங்கே தான் வரவேண்டும் என இருந்த காரணத்தால் இயக்குனர் கே.பாலசந்தர் ரோஜா படத்தை தயாரித்து அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தாராம்.
குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவிடம் பணிபுரிந்தவர் தான் எனவே அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து இளையராஜாவை ஓரம் கட்ட வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டு தான் பாலசந்தர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் எனவும் மருத்துவரும், சினிமா ஆய்வாளருமான காந்தராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ரோஜா படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.