3 உலக கோப்பை அரை இறுதி போட்டிகளிலும் மோசமான சாதனைகளை படைத்த விராட் கோலி !

3 உலக கோப்பை அரை இறுதி போட்டிகளிலும் மோசமான சாதனைகளை படைத்த விராட் கோலி !

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.இந்த போட்டியில் நியூ சிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.இதில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் வரிசையில் ஆடிய மூன்று வீரர்களான ராகுல் ,ரோகித் மற்றும் கோலி 1 ரன்னில் வெளியேறினார்கள்.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைத்தது.

ஆனால் 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதிப்போட்டிகளை பொருத்தவரை தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி மிகவும் மோசமான சாதனை படைத்துள்ளார். 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் கோலி இதுவரை  2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்றுமுறை விளையாடியுள்ளார்.2011 ஆம் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய  இந்திய அணியில் விராட் கோலி 21 பந்துகளை எதிர்கொண்ட 9 ரன்னில் வகாப் ரியாஸ் பந்தில் வெளியேறினார்.2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி விராட் 13 பந்துகளை எதிர்கொண்டு 1  ரன் மட்டுமே எடுத்து ஜான்சன் பந்துவீச்சில் வெளியேறினார். தற்போது நியூ சிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளை எதிர்கொண்ட விராட் 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் பந்துவீச்சில் வெளியேறினார்.இதனால்  2011 ,2015 மற்றும் 2019 ஆண்டுகளில் விராட் விளையாடிய  உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து மோசமான  ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளார் .

 

 

Join our channel google news Youtube