கொரோனாவால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது தவறான செய்தி!

கொரோனாவால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது தவறான செய்தி!

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வந்தாலும் தமிழகத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களை விட குணமாகியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்,  தமிழகத்தில் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன, கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகவும் தவறானது.

மருத்துவர்கள் இறப்பு குறித்த தகவல்களை இந்திய மருத்துவர் சங்கமே மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிபவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மன உறுதியை சீர் குலைக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறி உள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube