உயிர் காக்கும் உபகரணம் இல்லாமல் 77 குழந்தைகள் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையின் அவல நிலை…

  • ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகள்  அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள் வந்தன.
  • இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது,  டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடனே உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் தற்போது  வெளியாகி உள்ளது.இந்த உயிரிழப்பிற்க்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும், நோய் தொற்று பாதிப்புகள் உள்ளிட்டவைகளே உயிரிழப்புக்கான  முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்மையான காரணத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.மேலும் இதுகுறித்து விரிவாக விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

author avatar
Kaliraj