டிஎன்பிஎல் தொடரின் இன்றைய DGD vs MADURAI போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திண்டுக்கல் அணியில் சிவம் சிங் மற்றும் விமல் குமார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களையடுத்து களமிறங்கிய அருண் 3 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்பின், பாபா இந்திரஜித் மற்றும் ஆதித்யா கணேஷ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திரஜித் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 78 ரன்களை குவித்தார்.
முடிவில், திண்டுக்கல் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 78* ரன்களும், ஆதித்யா கணேஷ் 22* ரன்களும் அடித்துள்ளனர். மதுரை அணியில் குர்ஜப்னீத் சிங் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.