அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது – பிரதமர் மோடி

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பின் ராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம்.நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது .இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை. ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது.உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி என்று பேசியுள்ளார்.