அயோத்தி வழக்கு : சமரசக்குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் சமரசக்குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.

அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.அப்போது நடைபெற்ற விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

இன்று அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கினை  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

தற்போது அயோத்தி வழக்கில்  கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.சமரசக்குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

Leave a Comment