அட கொடுமையே.! விக்கிப்பீடியாவுக்கு வந்த சோதனை.! நன்கொடை கேட்டு பதிவு.!

  • விக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் பதிவிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் பெட்டகமாக இருப்பது விக்கிபீடியாவாகும். இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், சுலபமாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. விக்கிபீடியா உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் தனிச்சையாக கொண்டு இயங்கும் இணையதளம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 லட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு யார் வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் தேவைப்படும் தகவல்களை இலவசமாக எழுதி, திருத்தி, மாற்றம் செய்ய முடியும்.

இந்நிலையில், விக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் நேரடியாக விஷயத்துக்கு வருவோம். அதாவது சராசரியாக ரூ.1,000 நன்கொடையாக விரும்புகிறோம். ஆனால், 98 சதவிகித வாசகர்கள் நன்கொடை அளிப்பதில்லை. இதைப் படிக்கும் நபர் ஒருவர் ரூ.150 நன்கொடை அளித்தால் கூட போதும் என்றும்,  உங்களது ஒரு வார காபி-க்கு ஆகும் செலவை எங்களுக்கு நன்கொடையாக அளித்தால் விக்கிபீடியா நீடித்து நிலைக்க உதவியாக இருக்கும். மேலும் தயவுசெய்து தொடர்ந்து எங்களை ஆன்லைனில் வாழவும், வளரவும் உதவுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்