அண்ணாத்த திரைப்படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்..!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி, சுரேஷ் சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

மேலும் அண்மையில்  இந்த படத்திலிருந்து வெளிவந்த தீம் மியூசிக் ரசிகர்களுக்கு இடையே பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ரஜினி ரசிகர்ளை உற்சாகப்படுத்தும் வகையில் அண்ணாத்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம் அண்ணாத்த படப்பிடிப்பை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் துவங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.