கொரோனா பரவாமல் தடுக்க தனுஷின் சகோதரியின் விழிப்புணர்வு வீடியோ.!

கொரோனா பரவாமல் தடுக்க தனுஷின் சகோதரியின் விழிப்புணர்வு வீடியோ.!

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வு வீடியோவை தனுஷின் சகோதரி வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல மாநிலங்களில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கொரனாவிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கூறி பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், வருபவர்கள் செய்ய வேண்டியவற்றையும் தனுஷ் அவர்களின் சகோதரி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனாவால் பலியானார்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் ஒரு சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொள்வார் என்ற பயத்தினாலும், கொரோனா வைரஸின் தாக்கத்தை உணராமல் அஜாக்கிரதையாக இருப்பதுமே காரணம் என்று கூறியுள்ளார். எனவே இந்த கொரோனாவை தடுக்க அனாவசியமாக வெளியே செல்லாமலும், தனக்கு தொற்று இருந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்காமலும், மற்றவர்களிடமிருந்து தொற்றை வாங்கி கொள்ளாமலும் இருக்க வேண்டும்.

ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு செல்பவர்கள் கண்டிப்பாக 15 நாட்களாவது உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். மேலும் சின்ன அறிகுறிகளுடன் தென்படுபவர்களில் சர்க்கரை வியாதி, இதய நோய்,, கர்ப்பிணி பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் உட்பட்டவர்கள் அசாதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவும். மேலும் மருத்துவர்கள் தேவைப்பட்டால் மட்டுமே தனிமைப்படுத்துவார்கள். வீட்டில் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரம் தெர்மோமீட்டர் வைத்து டெம்பரேச்சரை குறித்து கொள்ளுங்கள்.

மேலும் கடைகளில் கிடைக்கும் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் என்பதை பயன்படுத்தி நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். அதில் 97 – 100 என்றால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள், குறைவு என்றால் மருத்துவரை அணுகவும். மேலும் பயப்படாமல், தினமும் சத்தான உணவு வகைகளை சாப்பிடவும். அதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் டி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ளவும். இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் பார்த்து மருந்து கடைகளில் சென்று வாங்கும் மருந்துகளை எடுத்து கொள்ளாதீர்கள். சரியான நேரத்தில் மருத்துவர் மற்றும் மருத்துவமனையை நாடினால் மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும், வெளியே சென்றால் மாஸ்க் அணியவும், அதனையடுத்து வீட்டில் வந்த பின்னர் குளித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். தற்போது அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.. 

Join our channel google news Youtube