1 வயசு ஆகாத குழந்தைக்கு இந்த மாதிரி உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.!

ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின்

By gowtham | Published: May 18, 2020 07:18 PM

ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம்.

புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே.

எப்போதும் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்லுவார்கள். 6 மாதம் ஆன பிறகு குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்துவது பல பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

ஆனால் எல்லா உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்க முடியாது. குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்த தொடங்கும் போது என்னென்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும் எதை கொடுக்கக்கூடாது என்பதை அறிந்த பின்னரே கொடுக்க வேண்டும்.

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். இருந்தாலும் அதில் பாக்டீரியாவான குளோஸ்ட்ரிடியம் போட்லினம் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதாம். இது போட்லினம் என்ற நச்சுத்தன்மையை உருவாக்குகிறதாம். இந்த நச்சுத்தன்மை என்ன செஇகிறது எனறால் குழந்தைக்கு சோம்பலை உண்டாக்கும்.

சத்துக்கள் உறிஞ்சுவதை பலவீனப்படுத்தும், தசைகளை பலவீனப்படுத்தும் மற்றும் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் எந்நேரமும் குழந்தை எரிச்சலுணர்வையும், தலைச்சுற்றல் அறிகுறிகளுடனும் இருக்கும். இது ஒரு அரிய நோய்த்தொற்று தான். ஆனால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதல் பிறந்தநாள் வரை உங்கள் குழந்தைக்கு தேன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பசும்பால் குழந்தைக்குஒரு வயது ஆகும் வரை தாய்ப்பாலைத் தவறாமல் கொடுங்கள். ஏனெனில் ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தையால் மாட்டுப் பாலில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நொதிப் பொருட்களால் செரிமானம் செய்ய இயலாது.

வேர்க்கடலை ஆரோக்கியமானதாக மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துமாம். எனவே வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால் அது ஒரு வயது ஆகாமல் கொடுக்காம இருப்பது நல்லது.

கடல் உணவுகளில் முக்கியமாக இறால், நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.உங்கள் குழந்தைக்கு கடல் உணவுகளைக் கொடுக்க நினைச்சீங்கனா ஒரு வயதிற்கு மேல் கொடுக்க தொடங்குங்கள் சில மீன்கள் சுறா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் உள்ளது. மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்க வேணாம்

Step2: Place in ads Display sections

unicc