அவகோடா பழம் அமோக விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

  • பழங்களில் அதிக சத்து கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு அதிலும் இதற்கு இணையாக அவகோடா பழம் என்று கூறப்படுகிறது.
  • எப்போதும்  அதிகமாக  விற்ற அவகோடா கடந்த இரண்டு நாட்களாக  குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

பழங்களில் அதிக சத்து கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு அதிலும் இதற்கு இணையாக சத்து மிகுந்த அவகோடா பழம் என்று கூறப்படுகிறது. இப்பழம் வெண்ணெய் பழம் என்றும் இதை அழைப்பார்களாம். இப்பழங்கள் மலை பகுதியில் அதிகம் விளையக்கூடிய கொடைக்கானலில் தாண்டிக்குடி, சென்பகனூர், பேத்துபாறை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில்பயிராக விவசாயம் செய்து வருகின்றன.

மேலும் இங்கு விளைச்சல் அதிகமாக இருந்தாலும்  உள்நாட்டில் இன்னும் அதனுடைய பயன்கள் தெரியாத நிலையில் வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யப்படுகிறதாம். தற்போது அதிக விளைச்சல் காரணமாக ஒரு கிலோ ஒன்றுக்கு எப்போதும்  200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்ற அவகோடா கடந்த இரண்டு நாட்களாக கிலோ ரூபாய் 120 முதல் 150 ரூபாயா குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.