கோவில்பட்டி A.V மேல்நிலைப்பள்ளியின் கல்வி உதவித்தொகை மற்றும் கட்டண கொள்ளையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ( SFI )_கலெக்டரிடம் மனு…..

கோவில்பட்டி A.V மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற மாணவர் கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் , அதற்கு துணைபோகும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை(CEO,DEO) கண்டித்தும் மாவட்ட தலைவர் ரா.அமர்நாத் தலைமையில் மனு அளிக்கப்பட்டது…….

கோவில்பட்டிஅரசு உதவிபெறும் பள்ளியான  A.V மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் SC/ST மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை ரூபாய் 1850தில் ரூபாய் 1000த்தை கல்வி கட்டணம் என்று கூறி பிடித்தம் செய்துவிட்டு ரூபாய் 850 மட்டும் மாணவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கி வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினரிடம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மௌனம் சாதித்தும்,நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்ற மெத்தன போக்கில் செயல்படுகின்றனர்.

இதனையடுத்து கடந்த 5 மாணவர்களின் பணத்தை கொள்ளையடித்த பள்ளி நிர்வாக செயலாளரையும்,அதற்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர் (கிளார்க்) உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

பள்ளிநேரத்தில் தங்களது சொந்த வேலைகளை பார்க்க செல்லும் ஆசிரியர்கள்,மாணவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் சிவகுமார்,ராமர்,செந்தில்,ஸ்ரீதர் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்யவேண்டும்.

5 வருடங்களாக மாணவர்களிடம் கொள்ளையடித்த ரூபாய்.90000 பணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ் முன்னிலை வகித்தார் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் voc கல்லூரி பொறுப்பாளர்கள் பிரபு,ரமேஷ் மற்றும் ஆனந்த் உட்பட 25 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment