இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு இனிதே வந்து இறங்கியது… இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது…

  • இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல்.
  • சகல வசதிகளுடன் வந்து இறங்கும் இந்த வாகனம் குறித்த தகவல்.
இந்தியாவில் இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
Image result for royal enfield classic 500 tribute black
இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நண்பகல்  2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  • புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்
  • இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர்,
  • 41.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும்.
  • இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

Image result for royal enfield classic 500 tribute black

இதற்க்கு முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த பி.எஸ்.6 கிளாசிக் 350 மாடல் விலை ரூபாய். 1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை  பி.எஸ்.4 மாடலை விட ரூ. 11,000 வரை அதிகம் ஆகும். பி.எஸ். 6 கிளாசிக் 350 மாடலில் புதிதாக  எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் விலை ரூ. 1.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பி.எஸ். 6 என்ஜின் தவிர பல்வேறு இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

author avatar
Kaliraj