100 விழுக்காடு எம் சாண்ட் பயன்பாட்டை உயர்த்துவதே தமிழக அரசின் நோக்கம்!முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ,தமிழ்நாட்டில் எம்.சாண்ட் ((M-Sand)) பயன்பாட்டை 100 விழுக்காடு அளவிற்கு கொண்டு வருவதே, அரசின் நோக்கம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் பதிலுரை முடிந்த பிறகு, கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழ்நாட்டில் எத்தனை எம்.சாண்ட் ஆலைகள் உள்ளன? என்றும், எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாட்டில், மணல் … Read more

எனக்கு அந்த மாதிரி படங்களையும் தாண்டி,இந்த மாதிரி படம் தான் பிடிக்கும்!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் … Read more

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்!

நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்காக பல முறை, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, … Read more

ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது!

16 வயது சிறுமியை  ராமநாதபுரத்தில்  ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று இருந்ததால், அவளது பெற்றோர் புதனன்று ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், … Read more

தாராவியை குறிவைத்த நாயகன், தலைவா வரிசையில் “காலா” ?

நாயகன், தலைவா வரிசையில் “காலா” திரைப்படம்? கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த … Read more

விருதுநகர் நீதிமன்றம் மதுரை சிறையிலேயே வைத்து நிர்மலா தேவியின் குரல் மாதிரி பதிவு செய்ய உத்தரவு!

விருதுநகர் நீதிமன்றம் ஆய்வு செய்வதற்காக, பேராசிரியர் நிர்மலா தேவியின் குரல் மாதிரியை மதுரை மத்திய சிறையில் வைத்தே பதிவு செய்ய  அனுமதி வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், தற்போது நிர்மலா தேவி சிறையில் உள்ளார். செல்போன் மூலம் மாணவிகளிடம் பேசியது நிர்மலா தேவிதான் என்பதை உறுதிப்படுத்த குரல் மாதிரியை பதிவு செய்து ஆய்வு செய்ய செய்வதற்காக அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி … Read more

ரஜினி அவருக்கே தெரியாமால் சமூக விரோதியாக நடித்துள்ள படம் காலா!ரஜினியை வச்சி செஞ்ச இணையதளவாசிகள்

‘காலா’ திரைப்படம் ரஜினி நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில்  இன்று  வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.அந்த கருத்து பதிவை தற்போது பார்ப்போம். எல்லாம் மாயை♔ ‏ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காலா நல்ல சோஷியல் மெசேஜ் உள்ள படம்.. ரஜினி ரசிகனாக எனக்கு சிறிது ஏமாற்றம் தான்.. காலா தாராளமாகப் பார்க்கலாம்.. Karthik ‏ஓப்பனிங் அந்தளவு இல்ல. இன்டர்வல் செம்ம.. அப்றம் கதை நல்லா பிக்அப்பாகி கடைசில வர்ற அந்த கிளைமாக்ஸ் சான்ஸே இல்ல.. … Read more

மதுரையில் காலா டிக்கெட் தகராறில் வினியோகஸ்தரை கடத்திச் சென்ற 5 பேர் கைது!

காலா திரைப்பட டிக்கெட் விற்பனையில் மதுரையில்  ஏற்பட்ட தகராறில், வினியோகஸ்தரை கடத்திச் சென்றதாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 சாக்குமூட்டைகளில் போலி ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். காலா திரைப்படத்தில் மதுரை வினியோகஸ்தரான எஸ்.கே. பிலிம்ஸ் செல்வராஜ் என்பவரை, மதுரை பிபீ குளத்தைச் சேர்ந்த அஜித், விக்னேஷ் ஆகியோர், இரு  தினங்களுக்கு முன் அணுகியுள்ளனர். திரைப்படம் வெளியாகும் தினத்தில், தங்கரீகல் திரையரங்கில் முதல் காட்சிக்கான 500 டிக்கெட்டுகளை, 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு:ராமநாதன் என்பவருக்கு ரூ.50,000 அபராதம் ,வழக்கு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் வழக்கை தொடுத்த ராமநாதன் என்பவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற வழக்குகளை தொடருவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இந்த கடிதத்தில், ஒராண்டில் தமிழகத்திற்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவைபடுகிறது. கரும்பு விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு அறிவித்த நிதியை உடனே வழங்க வேண்டும். சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும் என்றும்  பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.