தாஜ்மகாலை இடித்து விடுங்கள்…!உச்சநீதிமன்றம் ஆவேசம்

தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆவேசமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆகும். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹாலை காக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய முறை அறிமுகம்!நேர்காணல் தேர்வை நடத்த முடிவு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம் முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையை அமல்படுத்துகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

தென் கடலோர பகுதி மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைப்பெய்ய வாய்ப்பு உள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலுக்குள் செல்லும் போது தென் கடலோர பகுதி மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நீட்- கூடுதல் மதிப்பெண்: உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே. ரெங்கராஜன் கேவியட் மனு தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில்  நீட்- கூடுதல் மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் மனுதாரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியுமான   டி.கே. ரெங்கராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே. ரெங்கராஜன்,உச்சநீதிமன்றத்தில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில்  கேவியட் மனு தாக்கல் செய்தார்.உச்சநீதிமன்றத்தை சிபிஎஸ்இ அணுகினால் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது என்று அவர் மனுவில் கூறியுள்ளார். தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க … Read more

நடிகர் விஜய் இதை செய்தால் அவருக்கு நிச்சயம் புற்றுநோய் நோய் வரும்!அன்புமணி பகீர்

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது. இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பொதுச்சுகாதாரத்துறை இயக்குனர் முருகதாஸ்,நடிகர் விஜய்,படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோருக்கு புகை பிடிக்கும் காட்சி … Read more

கிறிஸ்டி நிறுவனத்த்தில்  ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு?ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் பறிமுதல் ?

நாமக்கல்லில் கிறிஸ்டி நிறுவனத்த்தில் 5 நாட்களாக நடைபெற்ற  வருமானவரித்துறை  சோதனையில் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே  திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில்  கிறிஸ்டி நிறுவனத்தில் 5 நாட்களாக வருமானவரிதுறையினர்  சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் 5 நாட்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தகவல்  தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்வதில் தடையாக இருக்காது!அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்வதில் தடையாக இருக்காது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் ராகுல் காந்தியின் கருத்தை மத்திய அரசு ஏற்றால் துணை நிற்கும் என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது கொலை வழக்கு! தூத்துக்குடி  நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொலை முயற்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது  பதிவுச்செய்ய தூத்துக்குடி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி வழக்கறிஞர் ஜெகதீஷ்ராமை வைகோ ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.இதை விசாரித்த  தூத்துக்குடி நீதிமன்றம் வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிய  உத்தரவு பிறப்பித்தனர் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஓரினச் சேர்க்கை வழக்கு:தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பது தவறில்லை !உச்ச நீதிமன்றம்

வயது வந்த இருவர் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பது தவறில்லை என்பதே எங்களது கருத்து என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான  வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதில் மத்திய அரசு ஓரினச் சேர்க்கையை குற்றமில்லை என அறிவிக்க கோரிய வழக்கில் வாதிடப் போவதில்லை என  பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.அதில் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு உபட்டு முடிவெடுப்பதை ஏற்கத் தயார் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிடுகையில்,இந்துமத சட்டங்களையும்   ஓரினச் சேர்க்கை … Read more

தமிழ்நாடு பிரீமியர் லீக்:வெளி மாநில வீரர்கள் பங்கேற்க தடை ..!உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற … Read more