#BreakingNews : தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிப்பு

தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.ஆகவே  தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 88,956 வாக்கு மையங்கள், ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1000 … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில்  வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் மசோதா … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு – சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் ?

வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.இன்று பிற்பகல்  தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கும் ,கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

பல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுகையில், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்கள் அறிவிப்பது இல்லை.கடன் வாங்குவது வளர்சிக்காக தான்.எல்லா மாநிலங்களும் கடன் … Read more

முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் நேரம் மாற்றம் ?

முதலமைச்சர் பழனிசாமி 2.30 மணிக்கு  செய்தியாளர்களை  சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளது.   இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி இன்று மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.செய்தியாளர் சந்திப்பு 3.30 மணிக்கு நடைபெரும் … Read more

இன்று பிற்பகலில் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என … Read more

ஓய்வு பெரும் வயது 60 -அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் நேற்று  தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், … Read more

திருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்

“திருக்குறல்” படித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மை காலமாக தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியமான திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ” கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை “ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கல்வி எனும் அதிகாரத்தில், குறள் எண் 400-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது . … Read more

அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் -ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்திய … Read more

#BreakingNews : இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு ! 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு ?

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் … Read more