மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். … Read more

உறியடி ஹீரோ விஜய் குமாரின் புதிய படம் தொடக்கம்..!

உறியடி படத்தின் நடிகரான விஜய் குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனரான விஜய் குமார் உறியடி, உறியடி 2 என்ற இரண்டு படங்களை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தை உறியடி மற்றும் … Read more

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி..!-பிலிப்பைன்ஸ் அறிவிப்பு..!

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக … Read more

ரஷ்யாவில் மாயமான அடுத்த விமானம்..!-ஒரே மாதத்தில் 2 விமானங்கள் மாயம்..!

ரஷ்யாவில் தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 6 ஆம் தேதி ஆன்-26 ரக விமானம் ரேடார் பார்வையிலிருந்து மறைந்தது. பின்னர் இது குறித்து தேடும் பணியில் ஈடுபட்ட பின்பு தான் விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. தற்போது ஒரே மாதத்தில் அடுத்தபடியாக மீண்டும் ஒரு விமானம் காணாமல் போய் உள்ளது. இந்த விமானம் சைபீரியா பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமானத்தில் 13 … Read more

கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கண்டுபிடிப்பு..!

கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் அகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், உறைகிணறு, கருப்பு மற்றும் சிவப்பு நிற பானைகள், நத்தை கூடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்விடத்தில் தோண்டப்பட்ட மூன்றாவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் அழகிய பெண் … Read more

துருக்கியில் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு..!

துருக்கியில் ஆயிரக்கணக்கான ப்ளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பறவைகள் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் கொன்யா பகுதியில் இருக்கும் இரண்டாவது பெரிய ஏரியான டஸ் ஏரியில் வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்த உவர் ஏரிக்கு வரக்கூடிய நீரை சிலர் அவர்களது பகுதிகளுக்கு திருப்பி கொண்டதால் வறண்டு கிடப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணத்தால் இந்த வறண்ட பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செல்கக் பல்கலைக்கழகத்தின் … Read more

ஜெர்மனி வெள்ளப்பெருக்கில் 60 பேர் பலி..!-1,300 பேர் மாயம்..!

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை. மேற்கு ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஜெர்மனி மற்றும் இதன் அருகில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும் பல வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். … Read more

செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்..!

விழுப்புரம் செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சந்தை நடைபெறும். இந்த சந்தையில் வேலூர், தர்மபுரி, ஆம்பூர், பெங்களூர், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல வியாபாரிகள் இங்குள்ள சந்தையில் விற்கும் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். தற்போது பக்ரீத் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் இந்த வாரச்சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு பெங்களூர், சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை போன்ற பல பகுதிகளிலிருந்து … Read more

ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு..!-6 பேர் பலி, 30 பேர் மாயம்..!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேற்கு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துகொண்டது. நேற்றிரவு பெய்த மழை காரணத்தால் ரைன்லேண்ட்-பேலட்டினேட் என்ற நகரில் உள்ள ஸ்கல்டு பகுதியில் இருக்கும் 6 குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், 25 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வெள்ளப்பாதிப்பால் அப்பகுதியில் 30 பேர் காணாமல் … Read more

#Breaking: தமிழத்தில் புதிதாக 2,405 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-49 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,405 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,405 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  25,28,806 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 148 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,606 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,006 பேர் … Read more