இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்த குற்றச்சாட்டில் ஸ்வீடனை சேர்ந்த ஈரானியருக்கு மே 21 -க்குள் தூக்கு தண்டனை …!

பேரிடர் மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாகிய அஹ்மத்ரேசா ஜலாலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது படிப்பு சம்பந்தமாக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது  இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சுவீடனை சேர்ந்த ஈரானியர். எனவே, ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியம் அஹ்மத்ரேசா ஜலாலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரை விடுவிக்க வேண்டுமென ஈரானிய பிரதிநிதிகளிடம் கூறி வருவதாக ஸ்வீடன் வெளியுறவு … Read more

ஸ்விக்கி வாடிக்கையாளர்களே …, இனிமேல் ட்ரோன் மூலம் தான் டெலிவரி…!

நவீனமயமாகியுள்ள உலகத்தில் இயந்திரங்களே மனிதர்களின் வேலையை  செய்யும் வகையில் காலம் மாறி வருகிறது. பல நிறுவனங்கள் உணவுகள், உடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மளிகை பொருட்களை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் இந்த ட்ரோன் சேவை அதிகாரபூர்வமாக … Read more

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது …!

இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றும் படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 14 பேரில் 12 பேர் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பேர் படகோட்டிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் இலங்கையிலுள்ள திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், படகோட்டிகள் இருவரும் மன்னாரை … Read more

அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ் .., எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு … Read more

பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரை … Read more

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போரில் உக்ரைன் வெற்றி பெரும் – இங்கிலாந்து பிரதமர்..!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைனுக்கிடையில் தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் … Read more

மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நிறைவு…, பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என  கூறியிருந்தார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என … Read more

சித்ரா இறப்பதற்கு முன்பு நடந்தது இது தான் – உண்மையாய் உடைத்த சித்ராவின் கணவர் ஹேமந்த் …!

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள நாசரேத்கோட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என பல தரப்பினரும் தெரிவித்து வந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் எனவும் பலர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சித்ராவின் தந்தையான ஓய்வு பெற்ற எஸ்.ஐ காமராஜ் அவர்கள் நசரேத்பேட்டை … Read more

குஜராத் அரசு பயனற்றது – ஜாமினில் வெளியேறிய ஜிக்னேஷ் மேவானி பேச்சு..!

குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும்  அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் தொடர்ந்து பிரதமர் மோடி குறித்தும், பாஜக … Read more

3 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா …!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே 5-ஆம் தேதி இரவு அமித்ஷா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என கூறப்படுகிறது. … Read more