Author: Muthu Kumar

மணிப்பூர் வன்முறை; I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் இன்று கருப்பு உடையுடன் பங்கேற்பு.!

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்று எதிர்கட்சிக் கூட்டணி எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவு. கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். தற்போது வரை பிரதமர் விளக்கம் அளிக்காததால் இதனை கண்டித்து இன்று I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 Min Read
MPs Black INDIA

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படி செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு விசாரணை, இன்று மீண்டும் விசாரிக்கப்படுகிறது. நேற்று இதன் தரப்பு வாதங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்ததை அடுத்து மீண்டும் இன்று விசாரணை.

2 Min Read
MinisterSB Case Scourt

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடக்கம்.!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று, பார்படாசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடக்கம். வெஸ்ட் இண்டிஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக மோதும் ஒருநாள் போட்டித்தொடர் இன்று பார்படாசின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை, சமீபத்தில் நடந்து […]

4 Min Read
IND WI ODi

ட்விட்டர் எக்ஸ் என பெயர் மாற்றம்; புதிய சிக்கலில் எலான் மஸ்க்.!

எக்ஸ் என்ற பெயரில் ட்விட்டர் மாற்றப்பட்டதை அடுத்து, அந்நிறுவனம் புதிய சட்டசிக்கலுக்கு உள்ளாகும் என தகவல். எக்ஸ் X என்ற எழுத்திற்காக மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை வைத்துள்ளதால், ட்விட்டர் நிறுவனம் எக்ஸ் என புதிதாக பெயர் மாற்றம் செய்துள்ளதால், எலான் மஸ்க் புதிய சட்ட சிக்கலை எதிர்கொள்ளக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2003 முதல், எக்ஸ்பாக்ஸ் (Xbox) வீடியோ-கேம் சிஸ்டம் பற்றிய தகவல்தொடர்புகள் தொடர்பான X […]

4 Min Read
TwitterX Musk

மணிப்பூரில் தடை நீக்கம்; நிபந்தனைகளுடன் மீண்டும் இணையதள சேவை; அரசு அறிவிப்பு.!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த இணையதள சேவைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்ததால் மாநிலம் முழுவதும் இணையதள சேவை முற்றிலுமாக தடை செய்வதாக அரசு அறிவித்தது. மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாக குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தால் இதுவரை 110 க்கும் மேற்பட்ட […]

3 Min Read
Manipur internet use

எக்ஸ் என பெயர் மாற்றம்; ட்விட்டர் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழப்பு என தகவல்.!

எலான் மஸ்க், ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றியவுடன் அதன் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழக்கிறது என ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் நீலநிறப்பறவை சின்னமும் நீக்கப்பட்டு X என்ற எழுத்தாக மாற்றப்பட்டதன் விளைவாக, ட்விட்டரின் நிகர மதிப்பு 4 பில்லியன் டாலர் (ரூ.32,724 கோடி) மற்றும் $20 பில்லியன் (ரூ.1.63 லட்சம் கோடி) மதிப்பை இழந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய எலான் மஸ்க் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி […]

2 Min Read
Twitter X

ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது- இஸ்ரோ.!

சந்திராயன்-3 விண்கலம் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு. சந்திராயன்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை நோக்கி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் இந்த சந்திராயன்-3 விண்கலத்தை 4 முறை சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்பட்ட நிலையில் இன்று 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சந்திராயன்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் இன்று 5-வது சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. Chandrayaan-3 Mission: […]

3 Min Read
Isro Chandrayan-3

மீனவர்கள் கைது; கண்டித்து மீனவர் சங்க மாநாடு… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.!

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக்கண்டித்து நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்வதாக தகவல். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள், மீனவர்களின் படகுகளும் பிடித்து வைக்கப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது. இதனைக்கண்டித்து மீனவர் நலச்சங்கங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாபெரும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதையும்,தாக்கப்படுவதையும் கண்டித்து மீனவர் சங்க மாநாடு […]

3 Min Read
FishermanArrest conf

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்: கோரிக்கை நிராகரிப்பு.!

நேற்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யமுடியாது என ஜகதீப் தன்கர், மற்றொரு எம்பியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இருக்கை வரை சென்று விவாதித்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை மீண்டும் தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தில், மற்றொரு ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, நேற்று […]

3 Min Read
AAPMP Raghav Chadha

மணிப்பூர் விவகாரம்… எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை ஒத்திவைப்பு.!

மக்களவையில் இன்று நான்காவது நாளாக அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நிச்சயம் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் இன்று தொடங்கிய மக்களவையிலும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவை தொடங்கும் முன் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Loksabha adjourn 2pmm

INDvsWI: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் போட்டி ட்ராவில் முடிந்ததால் இந்திய அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் தொடர் வரும் 27 ஆம் தேதி பார்படாஸ் நகரில் […]

3 Min Read
WI squad

பயணிகள் அவதி… ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.!

ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முடங்கியுள்ளது. ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி(IRCTC) இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளதாக IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. Due to technical reasons the ticketing service is not available. Our technical team is resolving the issue. We will notify as soon as the technical […]

2 Min Read
IRCTC Crash

செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை காவல்… இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு.!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரு நீதிபதிகள் அமர்வு, அமலாக்கத்துறை காவலில் எடுப்பது குறித்து இன்று தீர்ப்பு வழங்குகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி அவரது மனைவி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் […]

4 Min Read
SenthilB Case j

இந்த ஆண்டில் ஜூன் வரை இவ்வளவு பேர் இந்திய குடியுரிமை துறப்பு- ஜெய்சங்கர்.!

இந்த ஆண்டில் ஜூன் வரை 87,026 இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல். இந்தியர்களில் வெளிநாட்டில் குடியேறுவது தற்போது அதிகமாகியுள்ள நிலையில், இந்த ஓராண்டில் முதல் பாதியில் மட்டும் அதாவது ஜூன் 2023 வரை, 87,026 இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்வதற்கு தங்களது இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் பணியிடங்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் படிப்பிற்காகவும் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர், இதுதவிர இந்தியர்களில் பலர் […]

3 Min Read
iNDIANS citizenship

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு; ஜெயவர்தனே சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.!

இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார். வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இரன்டு இன்னிங்சிலும் ரோஹித் சர்மா அரைசதம் (80 & 57) அடித்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா அதிரடியாக விளையாடி அதிவேக சதமடித்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக […]

4 Min Read
jeyawardene rohit

மீண்டும் இரு அவைகள் 2 மணிவரை ஒத்திவைப்பு; ஆம் ஆத்மி எம்.பி சஸ்பெண்ட்.!

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணிக்கு தொடங்கிய நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிய நிலையில் இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி 12 மணிக்கு அவைக்கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே முழக்கங்களை அதாவது, பிரதமர் மோடி […]

3 Min Read
parliament session adjourn 2p

துணைத் தலைவர் மீது தாக்குதல், திரிபுரா கிரிக்கெட் சங்கத்தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு.!

திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளரைத் தாக்கிய புகாரின் அடிப்படையில், திரிபுரா மாநில கிரிக்கெட் சங்கத்தலைவர் உட்பட 5 பேர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு. துணைத்தலைவர் மற்றும் செயலாளரை தாக்கியதாக திரிபுரா கிரிக்கெட் சங்கத்தலைவர் தபன் லோத் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோதிஸ்மன் தாஸ் சவுத்ரி கூறினார். விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது, மேலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவோம் என்றும் காவல்துறை உதவி […]

3 Min Read
TCA Prez

இன்று மீண்டும் நாடாளுமன்ற அவைகள் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு.!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை கூட்டம் இன்று மீண்டும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கடந்த வாரம் தொடங்கிய இரண்டு நாட்களும் முடங்கியது. மணிப்பூர் வன்முறை விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியிலும், பிரதமர் மோடி மணிப்பூர் விவாதத்திற்கு வரவேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தொடங்கிய மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் 12 […]

2 Min Read
Parliament session adjourn

பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு… இணைய வழியில் இன்று தொடக்கம்.!

நடப்பு கல்வியாண்டியில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று இணையவழியில் நடைபெறுகிறது. பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இணைய வாயிலாக இன்று தொடங்குகிறது. கலந்தாய்வில் அரசு அமைத்துள்ள மையங்கள் மூலம் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

2 Min Read
Engg.Counselling

ஜி-20 பேரிடர் பாதுகாப்பு மீட்பு மாநாடு; சென்னையில் இன்று முதல் 3 நாட்கள்.!

ஜி-20 பேரிடர் பாதுகாப்பு மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தும் ஜி-20 உச்சிமாநாட்டின் இந்த வருடத்திற்கான தலைமை இந்தியா ஏற்றபிறகு, அதன் பல்வேறு துறைகளின் முக்கிய கூட்டங்கள் இந்தியா முழுதும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்பு தொடர்பான கூட்டம், சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் கமல் கிஷோர் […]

2 Min Read
G20Chennai Session