#BREAKING: தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள்  என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பியாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று சாத்தான்குளம் … Read more

சீனாவில் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்களை பயன்படுவதுவதில் சிக்கல்.!

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 15-ம் தேதி சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில், தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கையாக சீனாவின் அனைத்து விதமான ஆப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால்,  ‘டிக் டாக், ஷேர் இட்,  போன்ற சீனாவின் 59 செயலிகளுக்கும் இந்தியாவில் முற்றிலும்  தடை … Read more

#BREAKING: லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.!

இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை தொடங்கியது. மூன்றாவது முறையாக நடக்கும் இந்த பேச்சு வார்த்தையில் லடாக்கில் பதற்றம் தணிப்பது பற்றி ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தையும்  சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தாக்குதல்.! இன்று மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில்  கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2008-ம் ஆண்டு தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  சுற்றுலா பயணிகள் உள்பட 174 பேரை உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது தாஜ் ஹோட்டலுக்குள் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மாவட்டத்திலிருந்து தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால், எல்லைப் பகுதி மற்றும் மும்பை முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து இந்திய … Read more

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் உரை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, முதல் கட்ட  ஊரடங்கை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஊரடங்கு போதும் நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். இந்த ஊரடங்கு காலத்தில் பல முறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி  மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், மத்திய அரசு நேற்று இரவு ஊரடங்கு தளர்வு 2-ம் கட்டத்திற்கான … Read more

எல்லை விவகாரம்.! இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.!

லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன இராணுவ வீரர்களுக்குக்கிடையில் கடந்த 15 -ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால், இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த  பிரச்சினையை பேச்சுவார்த்தை … Read more

மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சனம்.! ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி ஆஜராக உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்றனர். அப்போது, கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர். நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் … Read more

ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 31 -ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு எனவும் அதுவரை தேர்வுகளும் நடைபெறாது என்றும் ஆன்லைன் வகுப்புகளை … Read more

ஊரடங்கு நீட்டிப்பு.! தமிழகத்தில் பேருந்து இயங்க தடை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது  தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை 05-ம் தேதி வரை தொடரும் எனவும்  அதன் பிறகு சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முன்பு இருந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என … Read more

#BREAKING: தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு  இன்று இரவு  வரை அமலில் உள்ளது. ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில்  ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு … Read more