அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்..!

சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை  தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும்,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார். பொன்முடிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் … Read more

சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த சௌமியா சர்கார்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச … Read more

கோப்பை யாருக்கு..? இன்று இந்தியா – தென்னாபிரிக்கா மோதல்…!

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும். இரண்டாவது போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு … Read more

உயர்கல்வி அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு..!

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம்வழங்கியது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கபடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது … Read more

அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி ..!

உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து … Read more

இன்று தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

mk-stalin-1-2

தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்ட மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்  மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை … Read more

ஏலத்தில் தவறான வீரரை வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா.. பல லட்சம் இழந்த பஞ்சாப்..!

ஐபிஎல் புதிய சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 நேற்று துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ. 20.50 கோடி) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் பெரிய தவறு செய்தது. தங்கள் அணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் தவறான வீரரை … Read more

நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்…!

ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நட்சத்திர பேட்ஸ்மேன் … Read more

4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்த தமிழக அரசு..!

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி  ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கி மற்றும் பொது சேவை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, … Read more

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை ..!

தொடர் கன மழை காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், மதுரை மற்றும்  தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6  மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், திருச்சி … Read more