கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

Kovai DIG Vijayakumar

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயர் … Read more

இன்று தீர்ப்பு..! மோடி குடும்ப பெயர்… ராகுல்காந்திக்கு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன.?

Rahul Gandhi

மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி, மேல்முறையியீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து … Read more

ரூ.40 விலை குறைந்தது தக்காளி.! பொதுமக்கள் மகிழ்ச்சி.!

Tomato

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தக்காளி விலை தற்போது குறைந்துள்ளது.  கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு குறைந்து கொண்டே வந்ததால் இந்த விலை ஏற்றம் என கூறப்பட்டு வந்தது,. இந்நிலையில் தற்போது தக்காளி … Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு நிரந்தர பணிகள்..! விவரங்கள் இதோ…

NLC india

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் கீழ் செயல்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று 05-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : நிர்வாகப் பொறியாளர் (மெக்கானிக்கல்) – 31 + 63 காலிப்பணியிடங்கள். துணை பொது மேலாளர் … Read more

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது.! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

O.P.Ravindhranath ADMK MP

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் 2019இல் தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த … Read more

சற்று நேரத்தில் தீர்ப்பு.! ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வென்ற தேர்தல் செல்லுமா செல்லாதா.?

O.P.Ravindhranath ADMK MP

2019 தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியானது செல்லுமா செல்லதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.  கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகார துஷ்பிரயோகம் செய்தார் எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை … Read more

நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Heavy rain

நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது.  தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது. மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இன்று போல நாளையும், கோவை, நீலகிரியில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், தென்காசி, … Read more

தமிழக அரசின் நடவடிக்கையை பிற மாநிலத்தவர்கள் பாராட்டுகிறார்கள்.! அமைச்சர் பெரிய கருப்பன் பெருமிதம்.! 

Minister Periya Karuppan

மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் குறிப்பிட்டார்.  கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தை படுத்தும் விதமாக புதிய செயலியை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தக்காளி விற்பனை பற்றி கூறினார் வெளிச்சந்தையில் தக்காளி விலையில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட … Read more

வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை.! 

ED

வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிற்னர் .  வேலூரை சேர்ந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 85 ஆயிரம் பேரிடம் 5900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்வாக இயக்குனர்கள், ஏஜெண்டுகள் என பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது வேலூரில் மூன்று இடங்களில் ஐஎப்எஸ் … Read more

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொடூர கொலை முயற்சி.!

Murder

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த லோகேஷ் என்பவரை ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளது. அந்த நபரை வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் அந்த கும்பல் கொலை முயற்சில் ஈடுபட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் அரசு மருத்துவமனையில் கவலை கிடமாக இருக்கிறார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்த … Read more